உலகம்

புதிய வைரஸ் கண்டுபிடிப்பு: பாதிப்பு ஏற்பட்டால் 88% இறப்பு உறுதி என அதிர்ச்சி தகவல்

Published

on

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது என்பதும் இந்த வைரஸ் பரவல் காரணமாக லட்சக் கணக்கானோர் மரணமடைந்தனர் என்பது கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி இந்தியா உள்பட பல நாடுகளின் பொருளாதாரமும் கொரோனா வைரஸால் சீரழிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் படிப்படியாக உருமாறி ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா பிளஸ் என மாறி மாறி உருமாற்றம் அடைந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு வகை தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்க வேண்டிய நிலை மருத்துவர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி புதிய வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கையில் மார்பர்க் என்னும் புதிய வகை கொடிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த வைரஸ் தற்போது மேற்கு ஆப்பிரிக்காவில் பரவி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த கொடிய வைரஸ் வெளவால்களிலிருந்து பரவும் வைரஸ் என்றும் இது மனிதர்களுக்கு பரவினால் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்பர்க் என்னும் கொடிய வைரஸ் மனிதர்களுக்கு பரவினால் 88% இறப்பு விகிதம் உறுதி என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவ்வப்போது புதுப் புது வகையான வைரஸ்கள் உருமாறி வந்து கொண்டிருப்பது மனித இனத்தையே அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறதோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version