சினிமா செய்திகள்

குடியரசு தினத்தில் தொடங்கும் அசுரன் பட ஷூட்டிங்!

Published

on

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் வெளியான வடசென்னையின் அடுத்த இரண்டு பாகங்கள் வெளியாகும் முன்னர், அசுரன் எனும் புதிய படத்தில் மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது.

சமீபத்தில், பட டைட்டிலுடன் பட்டையுடன் புதிய கெட்டப்பில் இருந்த தனுஷின் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில், இன்று, வரும் ஜனவரி 26ம் தேதி முதல் அசுரன் படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை என மூன்று படங்களும் ஹாட்ரிக் சாதனை படைத்தன. ஆனால், வடசென்னை படத்தில் இடம்பெற்ற அளவுக்கு அதிகமான ஆபாச வார்த்தைகள், ஆபாச காட்சிகள் என பலவற்றுக்கு சென்சார் போர்டு கத்தரி போடாமல் வெளியிட்டது. ஆனால், வடசென்னை மக்களின் கடும் எதிர்ப்பு மற்றும் வழக்குகள் தொடரப்பட்டதை தொடர்ந்து, சில ஆபாச வசனங்களையும் காட்சிகளையும் வெற்றிமாறன் நீக்கினார்.

மூன்று பாகங்களாக வரும் என அறிவிக்கப்பட்ட வடசென்னை பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளதால், அதன் அடுத்தடுத்தடுத்த பாகங்களை தற்போது வெளியிடுவது ஆரோக்கியமானதாக அமையாது என எண்ணிய தனுஷ், வெற்றிமாறன் இயக்கத்தில் புது படத்தில் நடிக்க முடிவு செய்து உருவாக்கப்படும் படம் தான் இந்த அசுரன்.

seithichurul

Trending

Exit mobile version