உலகம்

தண்ணீர் குடித்துவிட்டு ரூ.7 லட்சம் டிப்ஸ் அளித்த நபர்.. அடடே காரணம்!

Published

on

நியூயார்க்: அமெரிக்காவின் சவுத் கரோலினாவின் கிரீன்வைல் நகரத்தில் உள்ளது சப் டாக்ஸ் ஹோட்டல். மிகவும் பிரபலமான இந்த ஹோட்டலில்தான் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது.

அங்கு தண்ணீர் குடிக்க வந்த நபர் ஒருவர் அங்கு வேலை பார்க்கும் பணிப்பெண்ணிற்கு ரூபாய் 7 லட்சத்து 30 ஆயிரம் டிப்ஸ் கொடுத்து இருக்கிறார். அலைனா கஸ்டர் என்று பணிப்பெண்தான் இந்த பணத்தை பெறுபவர். அங்கு வந்த நபர் இரண்டு கிளாஸ் தண்ணீர் கேட்டு இருக்கிறார்.

மிஸ்டர் பீஸ்ட் என்ற நபர்தான் இந்த பணத்தை கொடுத்தது. இவர் ஒரு யூ டியூப் பிரபலம். மிஸ்டர் பீஸ்ட் என்று பெயரில் இவர் யூ டியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு 90 லட்சம் சந்தாதாரர்கள் இருக்கிறார்கள்.

யாருக்காவது உதவ வேண்டும் என்று இதை செய்ததாக கூறியுள்ளார். மேலும் ஒருவருக்கு உதவும் போது அவர்கள் எப்படி சந்தோசபடுகிறார்கள் என்று பார்க்க ஆசைப்பட்டு இப்படி செய்ததாக அவர் கூறியுள்ளார்.

 

 

 

seithichurul

Trending

Exit mobile version