உலகம்

32 கேரள பெண்களை அர்மேனியாவிற்கு கடத்த முயன்ற நபர்.. அதிரடி கைது!

Published

on

பெங்களூர்: பெங்களூரில் இருந்து அர்மேனியாவிற்கு 32 கேரள பெண்களை கடத்தி செல்ல முயன்றதாக நபர் ஒருவர் பெங்களூர் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அர்மேனியாவில் உள்ள பாரம்பரிய மருத்துவ பல்கலைக்கழகத்தில் (University of Traditional Medicine Armenia) படிப்பதற்காக இந்த பெண்கள்  விசா எடுத்து இருக்கிறார்கள். மொத்தம் 32 கேரளாவை சேர்ந்த பெண்களுக்கு விசா அளிக்கப்பட்டு இருக்கிறது.

இவர்கள் நேற்று பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து அர்மேனியா செல்ல முயன்ற போது தடுத்து நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டனர். விசாரணையின் முடிவில் இவர்களை முறையின்றி கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்துள்ளது.

டோனி டாம் என்ற கேரளாவை சேர்ந்த நபர் கர்நாடகாவின் மங்களூரில் கன்சல்டன்சி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். பெண்களுக்கு நர்சிங் வேலை வாங்கி தரும் கன்சல்டன்சி நிறுவனம் ஆகும் இது. இதில்தான் இந்த 32 பேரும் படித்துள்ளனர். தற்போது போலீஸ் இந்த டோனியைதான் கைது செய்துள்ளனர்.

 

seithichurul

Trending

Exit mobile version