தமிழ்நாடு

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி: வானிலை ஆய்வு மையம் தகவல்

Published

on

அடுத்த 24 மணி நேரத்தில் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று, வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி உள்ளது என்பதால் பொதுமக்கள் குடிநீருக்கு கஷ்டப்பட தேவையில்லை என்பதும் விவசாயிகள் விவசாயத்துக்கு தேவையான நீர் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி தென்மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு சில பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் வடக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஆந்திர கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க இன்னும் 2 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அதே பகுதியில் பலத்த காற்று வீசும் என்றும் அரபிக் கடல் பகுதிகளுக்கு ஐந்து நாட்களுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version