தமிழ்நாடு

ஸ்டாலினுக்கு கராத்தே தியாகராஜன், உதயநிதிக்கு குஷ்பு: எல்.முருகனின் பலேதிட்டம்!

Published

on

திமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான முக ஸ்டாலின் கொளத்தூர் அல்லது ஆயிரம் விளக்கு ஆகிய இரண்டில் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டுமே அவர் ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் முக ஸ்டாலின் மகன் உதயநிதியும் சென்னையில் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் முக ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் இருவரையும் தோற்கடிக்க வேண்டுமென பாஜக மேலிடம் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் அவர்களுக்கு ஒரு அசைன்மென்ட் கொடுத்திருப்பதாக ஒரு செய்தி மிக வேகமாக பரவி வருகிறது.

இதற்காகத்தான் சமீபத்தில் கராத்தே தியாகராஜன் பாஜகவில் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கராத்தே தியாகராஜன், முக ஸ்டாலினின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் நன்கு அறிந்தவர். ஸ்டாலினின் நெருங்கிய நண்பர்கள் அனைவருமே கராத்தே தியாகராஜனின் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

எனவே முக ஸ்டாலின் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து கராத்தே தியாகராஜன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் உதயநிதி ஸ்டாலின் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் குஷ்பு போட்டியிடுவார் என தெரிகிறது. முக ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரையும் தோற்கடிக்க வேண்டும் என்று தலைமை கொடுத்த அசைன்மென்ட்டை சரியாக செய்து முடிப்பாரா எல் முருகன் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version