தமிழ்நாடு

டுவிட்டரில் வைரலாகும் #மன்னிப்புகேள்கமல்: என்ன காரணம்?

Published

on

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் சமீபத்தில் பேசிய ஒரு கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த கருத்துக்கு எதிராக ஆவேசமடைந்த நெட்டிசன்கள் #மன்னிப்புகேள்கமல் என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கமலஹாசன் சமீபத்தில் தனது கட்சியின் நான்காவது ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடினார். அப்போது அவர் பேசியபோது ’ஐந்து வருடங்கள் நான் முழுமையாக மக்களுக்காக சேவை செய்வேன். அதன் பின்னரும் 10 வருடங்கள் எனது உடல்நிலை நன்றாக இருக்கும் வரை சேவை செய்வேன். சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு மக்களை தொந்தரவு செய்ய மாட்டேன்’ என்று கூறினார்.

கமல்ஹாசன் கூறிய இந்த கருத்து முன்னாள் முதல்வர் கருணாநிதியை குறிப்பிடுவதாதாகவும் அவரது சேவையை கேலி செய்வது போன்றும் இருப்பதாகவும் பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

முதுமை என்பது ஒரு குறை இல்லை என்றும் சக்கர நாற்காலி அசிங்கம் அல்ல என்றும் அந்த வயதிலும் அவர் எவ்வளவு சாதித்தார் என்பதே முக்கியம் என்றும் மக்கள் போற்றிய ஒரு தலைவனை மட்டுமின்றி சக்கர நாற்காலி பயன்படுத்தும் அத்தனை மக்களையும் கமல்ஹாசன் அசிங்கப்படுத்தி உள்ளதாகவும் பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து #மன்னிப்புகேள்கமல் என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version