தமிழ்நாடு

ஒமிக்ரான் வைரஸ் பெயரில் நூதன மோசடி: காவல்துறை எச்சரிக்கை

Published

on

ஒமிக்ரான் வைரஸ் பெயரில் நூதன மோசடி ஒன்று நடந்து வருவதாகவும் இது குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஒமிக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் இந்த ஒமிக்ரான் வைரசுக்கு தற்போது தமிழகத்தில் பரிசோதனை செய்வது நிறுத்தப்பட்டு விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையிலும் ஒமிக்ரான் வைரஸ் பரிசோதனைக்கு ஆர்சி – பிசிஆர் இலவச பரிசோதனை செய்யப்படும் என்றும் இணையதளங்கள் மூலம் விளம்பரங்கள் வந்து கொண்டிருப்பதாகவும் இந்த விளம்பரத்தை கிளிக் செய்பவர்கள் மோசடியால் நூதன்மாக பாதிக்கப்பட்டு வருவதாக புகார்கள் வந்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

எனவே இந்த மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் https://cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என்றும் புகார் அளித்தவுடன் உடனடியாக சம்பந்தப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் இணையதளம் மூலம் பதிவு செய்ய முடியாதவர்கள் 155260 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரானுக்காக இலவச ஆர்சி – பிசிஆர் சோதனை என்ற பெயரில் இணையத்தில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version