இந்தியா

மாஸ்க் போடாவிட்டால் ரூ.1000 அபராதம்: அண்டை மாநில முதல்வர் எச்சரிக்கை

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பதும் இந்தியாவில் தினசரி கொரனோ பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது அமெரிக்கா பிரேசிலுக்கு அடுத்து இருக்கும் இந்தியா விரைவில் பிரேசிலை ஓவர்டேக் செய்துவிடும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை குறைப்பதற்காக நேற்று பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை செய்து சில அறிவுரை கூறினார். அதில் முதலாவதாக அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் மற்றும் முகக்கவசம் அணிந்து தான் வெளியே செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும் என்பதுதான்.

முகக்கவசம் என்பது மிகவும் முக்கியம் என்றும் இன்னும் சில ஆண்டுகளுக்கு உலக மனிதர்கள் அனைவரும் முகக்கவசத்தை போட்டே ஆகவேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முகக்கவசம் போடாமல் வெளியே வருபவர்களுக்கு அபராதம் உள்பட கடுமையான தண்டனை வழங்கவும் ஒவ்வொரு மாநிலமும் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்கள் அதிரடியாக சற்றுமுன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி மாஸ்க் இன்றி வெளியே வரும் நபர்களுக்கு ரூபாய் 1000 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் தெலுங்கானா மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version