தமிழ்நாடு

மனைவி விருப்பமனு கொடுத்த நிலையில் விமல் மீது ஸ்டாலினிடம் புகார்!

Published

on

திமுகவில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி சமீபத்தில் விருப்ப மனு கொடுத்த நிலையில் விமல் மீது முக ஸ்டாலினிடம் திமுக தொண்டர் ஒருவர் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விமல் மனைவி அக்சயா என்பவர் சமீபத்தில் திமுக தலைமை அலுவலகத்தில் மணப்பாறை தொகுதியில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு தாக்கல் செய்தார். மேலும் அவர் உதயநிதி ஸ்டாலினிடம் சென்று ஆசி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவருடைய மனைவிக்கு திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் திடீரென விமல் மீது திமுக தொண்டர் ஒருவர் முக ஸ்டாலினிடம் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முக ஸ்டாலினை நேரில் சந்தித்த அந்த தொண்டர் விமல் மீது பண மோசடி புகார் இருப்பதாகவும் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விமல் மனைவிக்கு திமுகவில் சீட் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் திடீரென அவர் மீது புகார் கிளம்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த புகாரை மீறி விமல் மனைவிக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Trending

Exit mobile version