தமிழ்நாடு

2021ல் சட்டசபை சபாநாயகர்; 2016ல் காவலர்களால் வெளியேற்றப்பட்டவர் – அப்பாவு குறித்த வைரல் வீடியோ!

Published

on

தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள திமுக அரசு, தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான அப்பாவுவை சட்டசபை சபாநாயகராக தேர்வு செய்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு திமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அப்பாவு, 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டது. அதை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் முறையிட்டார். அந்த வழக்கு இன்று வரை நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த முறை மீண்டும் திமுக சார்பில் எம்.எல்.ஏ ஆக போட்டியிட்ட அப்பாவு, அபார வெற்றி பெற்று சட்டமன்றத்துக்குள் நுழைந்துள்ளார். மேலும் அவர் போட்டியின்றி சபாநாயகராகவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

2016 ஆம் ஆண்டு அவர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடியில் பிரச்சனை இருப்பதாக குற்றம் சாட்டியபோது, அங்கிருந்த காவலர்களால் அவர் தரதரவென வெளியே இழுத்து வரப்பட்டு அவமானப்படுத்தப் பட்டார்.

இன்று அதே அப்பாவு, சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து சமூக வலைதளங்களில் ஒப்பீடு வீடியோ ஒன்று வலம் வந்து கொண்டிருக்கிறது.

seithichurul

Trending

Exit mobile version