தமிழ்நாடு

அதிமுகவின் ‘பொங்கல் பரிசுத் தொகுப்பு’ & திமுகவின் ‘கொரோனா நிவாரண நிதி’ வழங்கும் ரசீதுகளை ஒப்பிடும் வைரல் போட்டோ!

Published

on

தமிழகத்தில் கடந்த 7 ஆம் தேதி பொறுப்பேற்ற திமுக அரசு, கொரோனா வைரஸ் காலக்கட்டத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,000 ரூபாய் கொடுக்கப்படும் என்று அறிவித்தது.

அந்தத் திட்டத்தை இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து துவக்கி வைத்துள்ளார். கொரோனா நிவாரண நிதி கொடுப்பதற்கு தமிழக அரசு சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ரசீதில் திமுகவின் தலைவர்களின் படங்களோ, கட்சியின் கொடியே இருக்கவில்லை. மாறாக நிதியை வாங்கும் அட்டைதாரர்கள் குறித்தான விபரங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

இது ஒரு புறமிருக்க, கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி, அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு, குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் கொடுத்தது. அதற்கு உருவாக்கப்பட்ட ரசீதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் படங்கள் இடம் பெற்றிருந்தன.

இந்த இரு ரசீதுகளையும் ஒப்பிட்டுத் தற்போது படம் ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version