சினிமா செய்திகள்
சம்யுத்தாவை வெளிச்சப்படுத்திய கோமாளி!
![Comali-song-Jayam-Ravi-Samyuktha-Hegde-jpg-105531_ - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/08/Comali-song-Jayam-Ravi-Samyuktha-Hegde-jpg-105531_-1.jpg)
கோமாளி படத்தின் மூலம் அந்த படத்தில் இளம் வயது cக்கு காதலியாக நடித்த சம்யுத்தா பிரபலமாகியுள்ளார்.
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, சம்யுத்தா ஆகியோர் நடித்துள்ள படம் கோமாளி. இந்த படம் நேற்று வெளியாகி ஹவுஸ் புல் ஆக ஓடிவருகிறது.
முழுக்க முழுக்க சிரிக்கவைக்கும், சிந்திக்கவைக்கும் படமாக அமைந்துள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவியின் பள்ளி பருவ காதலியாக நடித்துள்ளார் சம்யுத்தா. அவருடைய திறமையான நடிப்பாலும் அவருக்கு பொருத்தமான காட்சியாலும் அவர் பிரபலமாகி வருகிறார்.
இதன் மூலமாக அவருக்கு பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.