உலகம்

சீனாவில் வைரல் ஆகும் நியூஸ் – ரீடர் ரோபோட்.. செய்திகளை வாசிப்பது ஏஐ ரோபோட்

Published

on

பெய்ஜிங்: சீனாவில் நியூஸ் வாசிப்பதற்காக ரோபோட் ஒன்று தனியார் தொலைக்காட்சி மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

சீனாவை சேர்ந்த ஸின்ஹு நிறுவனம் தங்களது தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பதற்காக ரோபோட் ஒன்றை நியமித்து இருக்கிறது. ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் (Artificial Intelligence)எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இந்த ரோபோட் செயல்படுகிறது.

நேற்று முதல் நாள் அந்த நிறுவனம், இனி எங்கள் செய்திகளை ரோபோக்களை தொகுத்து வழங்கும் என்று கூறியது. மனிதன் போலவே கொஞ்சம் கூட வித்தியாசம் இல்லாமல் ஒரு ரோபோட் வந்து செய்தி வாசித்தது.

இந்த ரோபோட், சீனாவின் சர்ச் எஞ்சினான சோகோவும், ஸின்ஹு நிறுவனமும் இணைந்து உருவாக்கியது ஆகும். இதை முழுதாக வடிவமைக்க மூன்று வருடம் ஆகியுள்ளது. இதை போலவே இன்னொரு பெண் ரோபோட்டும் ஆங்கிலத்தில் செய்தி வாசிக்கும் வகையில் உருவாக்கி இருக்கிறார்கள்.

 

 

Trending

Exit mobile version