தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலினுக்கு ஃபோன் செய்து பிறந்தநாள் வாழ்த்து சொல்ல ஒரு வாய்ப்பு!

Published

on

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்த நாளை மார்ச் 1-ஆம் தேதி நாளைய தினம் கொண்டாட உள்ளார். இதனையடுத்து அவருக்கு தொலைப்பேசி மூலமாக ஃபோன் செய்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க எண்களை அறிவித்துள்ளது திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு.

#image_title

தனது பிறந்த நாளை முன்னிட்டு நாளை காலை 7 மணிக்கு மெரினா கடற்கரைக்கு சென்று முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு பின்னர் அண்ணா அறிவாலயம் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின். அங்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை சந்திக்கும் அவர் மாலையில் பொதுக்கூட்ட விழாவில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பொதுமக்கள் பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் விதமாக 07127 1913 33 என்ற தொலைபேசி எண்ணை திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எண்ணுக்கு அழைத்து முதல்வர் ஸ்டாலினுக்கு தாங்கள் கூற விரும்பும் பிறந்தநாள் வாழ்த்தை 30 விநாடிகளுக்கு பதிவு செய்யலாம். மேலும் selfiewithCM.com என்ற இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ள QR குறியீடு மூலமாக முதல்வரின் பல்வேறு புகைப்படங்களோடு, தாங்கள் விரும்பிய முறையில் மெய்நிகர் செல்ஃபி எடுக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version