தமிழ்நாடு

மன்சூர் அலிகான் பேசியது கிரிமினல் குற்றம், விரைவில் வழக்குப்பதிவு: ஆணையர் பிரகாஷ்

Published

on

மன்சூர் அலிகான் பேசியது கிரிமினல் குற்றம் என்றும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களை சந்தித்தபோது கொரோனா என்ற நோயே இல்லை என்றும் தடுப்பூசி என்பது மக்களுக்கு தேவை இல்லாதது என்றும் தடுப்பூசி என்ற பெயரிலும் கொரோனா என்ற பெயரிலும் மக்களை பயமுறுத்துகிறார்கள் என்றும் தடுப்பூசி போடுவதால் கூடுதலாக நோய் வருமே தவிர எந்த நோயும் குணமாகாது என்று ஆவேசமாக பேசினார்.

மேலும் கொரோனா வைரஸ் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது என்றும் தற்போது தான் உருவாக்கிய அனைத்து நாடுகளின் அரசுகளும் நாடகம் ஆடுவதாகவும் பணம் சம்பாதிப்பதற்காகவே அரசியல்வாதிகள் இதுபோல் செய்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் முதலில் கொரோனா பரிசோதனை செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் இங்கு யாருக்கும் இல்லை என்றும் எனவே தடுப்பூசி யாருக்கும் தேவையில்லை என்றும் பேசினார் அவருடைய இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இது குறித்து பேட்டியளித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பிய நடிகர் மன்சூர் அலிகான் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்படும் என்றும் அவர் பேசியது கிரிமினல் குற்றம் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version