தமிழ்நாடு

டாஸ்மாக், திரையரங்குகளை மூட உத்தரவிட வேண்டும்: நீதிமன்றத்தில் மனுதாக்கல்

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக டாஸ்மாக், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், வழிபாட்டுத்தலங்கள் ஆகியவற்றை மூட வேண்டும் என பொது நலன் மனு ஒன்று சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக சென்னையில் 800க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம் குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகி வருகிறது என்றும் அதனால் மற்ற மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது போல் தமிழகத்திலும் விதிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பாக திரையரங்குகள் வழிபாட்டுத்தலங்கள் டாஸ்மாக் கடைகள் ஆகியவற்றை மூட உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மனுவின் தீர்ப்பில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடபடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version