சினிமா

’மாஸ்டர்’ தயாரிப்பாளர் மீது சிபிசிஐடி வழக்கு: பில்டப்பால் ஏற்பட்ட சிக்கல்!

Published

on

’மாஸ்டர்’ தயாரிப்பாளரின் பில்டப் காரணமாக தற்போது சிபிசிஐடி வழக்கு பதிவு செய்திருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு ஒரு சில வாரங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவின்போது விஜய் மற்றும் விஜய் சேதுபதி மேடைக்கு வரும் போது அவர்கள் நடித்த பழைய திரைப்படங்களில் இருந்து பாடல்கள் பில்டப்பிற்காக ஒலிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி இந்த நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகளிலும் ஒரு சில பாடல்கள் பயன்படுத்தப்பட்டது.

இந்த பாடல்களின் உரிமை தங்களிடம் இருக்கும் போது தங்களிடம் எந்த விதமான அனுமதியும் பெறாமல் பொதுவெளியில் லாப நோக்கில் பயன்படுத்தியதாக காவல்துறையிடம் நோவாக்ஸ் என்ற நிறுவனம் புகார் அளித்தது.

இந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் தற்போது சிபிசிஐடி காவல்துறையினர் மாஸ்டர் தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

விஜய் மற்றும் விஜய்சேதுபதிக்கு பில்டப் கொடுக்க வேண்டும் என்பதற்காக உரிமை பெறாத படத்தின் பாடல்களை பயன்படுத்தியதால் தற்போது ’மாஸ்டர்’ தயாரிப்பாளர் சிக்கலில் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த வழக்கை சமாதானமாக முடிக்க இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

seithichurul

Trending

Exit mobile version