தமிழ்நாடு

பள்ளிகள் மூடப்படுகிறதா? பொதுநல வழக்கு தொடர நீதிபதி அனுமதி!

Published

on

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன என்பதும் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு உள்பட அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஆல்பாஸ் என்று அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் முதல் கட்டமாக 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் கல்லூரிகளும் திறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பள்ளி கல்லூரிகள் திறந்ததிலிருந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் எனவே மீண்டும் பள்ளிகள் மூடப் பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் பள்ளிகளை மீண்டும் மூடவேண்டும் என்றும் நெல்லையை சேர்ந்த அப்துல் வகாபுதின் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனுவில் பள்ளிகள் திறந்ததன் காரணமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பள்ளிகளில் நேரடி வகுப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நீதிபதி முன் முறையீடு செய்யப்பட்டது. இந்த முறையீட்டு மனுவை நீதிபதி விசாரணை செய்தபோது ’பள்ளிகளுக்கு நேரடி வகுப்புகளுக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வி துறை மாணவர்களை கட்டாயபடுத்தவில்லை என்றும் பள்ளிகளுக்கு வராத மாணவர்களுக்காக ஆன்லைன் வகுப்புகளும் நடைபெற்று வருகிறது என்றும் அரசு சார்பில் வாதிடப்பட்டது.

இந்த நிலையில் மனுதாரர் இது குறித்த உரிய தகவல்களுடன் புதிய பொதுநல வழக்கு தாக்கல் செய்யலாம் என நீதிபதி கருத்து தெரிவித்தார். இதனை அடுத்து விரைவில் மனுதாரர் மதுரை உயர் நீதிமன்றத்தில் பள்ளிகளை திறப்பதற்கு தடை விதிக்கவேண்டும் என கோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version