தமிழ்நாடு

உதயசூரியன், இரட்டை இலை சின்னத்தை கூட்டணி கட்சிகள் பயன்படுத்த தடையா?

Published

on

தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கூட்டணிகள் முக்கிய கூட்டணிகளாக போட்டியிட்டு வருகின்றன. அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தமாக உள்ளிட்ட சில கட்சிகளும், திமுக கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டு வருகின்றன.

இந்த நிலையில் அதிமுக திமுக கூட்டணியில் போட்டியிடும் ஒரு சில கூட்டணி கட்சிகள் இரட்டை இலை மற்றும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்ப்பந்தம் செய்யப்பட்டன என்பதும் வேறு வழியின்றி அந்த கட்சிகளின் தலைவர்கள் அதற்கு ஒப்புக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இது குறித்த வழக்கு ஒன்று சென்னை ஐகோர்ட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்ற வழக்கறிஞர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சின்னங்களை ஒதுக்க தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் கூட்டணி கட்சிகள் திமுக அதிமுக கட்சிகளின் சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version