இந்தியா

ஆன்லைனில் 10, 12 வகுப்புகளின் பொதுத்தேர்வா? சுப்ரீம் கோர்ட் அதிரடி முடிவு!

Published

on

ஆன்லைனில் பொது தேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பொதுத்தேர்வு நடைபெறவில்லை என்பதும் இதனை அடுத்து ஆல்பாஸ் செய்யப்பட்டது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ள நிலையில் திடீரென மாணவர்கள் தரப்பில் இருந்து இந்த ஆண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நேரடியாக நடத்துவதற்கு பதிலாக ஆன்லைனில் நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .

கொரோனா காலத்தில் மாணவர்கள் பாதுகாப்புய் விஷயத்தில் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்றும் ஆன்லைனில் பொதுத் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் எடுத்துக் கொண்டதை அடுத்து இந்த மனுவின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பதே மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version