இந்தியா

தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட சுற்றுலா பயணிகள்!

Published

on

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆக்ராவில் உள்ள காதல் சின்னமான தாஜ்மஹாலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது உண்டு. இந்த நிலையில் இன்று திடீரென தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

இதனையடுத்து தாஜ்மகால் முழுவதும் அங்குலம் அங்குலமாக வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வந்ததாகவும், பலமணி நேரம் சோதனை செய்தும் எந்த வெடிகுண்டு பொருள்களும் வெடிகுண்டுகளும் கைப்பற்றப் படவில்லை என்றும் தெரிய வந்தது.

இதனை அடுத்து இந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபரை தேடி வருவதாகவும் அவர் கூறினார்., இதன் பின் மீண்டும் சுற்றுலா பயணிகள் தாஜ்மஹாலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். எனினும் அதிரடி படை வீரர்கள் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது

seithichurul

Trending

Exit mobile version