தமிழ்நாடு

சசிகலா வருகையையொட்டி புறாவுக்கு அதிமுக கொடி வண்ணம் பூசிய ‘ஆர்வக்கோளாறு’ தொண்டர்கள்

Published

on

அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியுமான சசிகலா, நேற்று தமிழகம் திரும்பினார். அவருக்கு பெங்களூருவில் இருந்து தமிழகம் வரை வழி நெடுகிலும் அவரது ஆதரவாளர்களால் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பெங்களூருவிலிருந்து ஓசூர், கிருஷ்ணகிரி வழியாக அவர் சென்னை, தியாகராய நகரில் இருக்கும் தனது வீட்டுக்கு இன்று அதிகாலை வந்தார். இந்தப் பயணம் கிட்டத்தட்ட 22 மணி நேரம் தொடர்ந்தது.

சசிகலாவை உற்சாகப்படுத்தும் வகையில் அவரது ஆதரவாளர்கள் பல்வேறு வித்தியாசமான முறைகளில் வரவேற்பு கொடுத்தனர். அந்த வகையில் மேளம் வாசித்து, கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றிப் பல இடங்களில் ஆர்ப்பரித்தனர் தொண்டர்கள். இன்னும் சில இடங்களில் ட்ரோன் மூலம் சசிகலா பேனர்களை வானத்தில் பறக்கவிட்டனர் தொண்டர்கள்.

சசிகலா வந்த வழி முழுவதும் இரு பக்க சாலைகளிலும் நின்று கொண்டு அரது கார் மீது மலர் தூவியும் மகிழ்ந்தனர் தொண்டர்கள். இதில் ஒரு சிலர், வெள்ளைப் புறா ஒன்றைப் பிடித்து, அதன் மேல் அதிமுக கொடி வண்ணத்தைப் பூசி, பறக்க விட்டுள்ளனர். இது கடும் விமர்சனங்களுக்கும் சர்ச்சைக்கும் உள்ளாகி இருக்கிறது. இச்சம்பவம் பூந்தமல்லியில் நடந்திருப்பதாக தெரிகிறது.

 

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version