தமிழ்நாடு

இனி லீவ் லெட்டர் வேண்டாம்: செயலி மூலம் விடுமுறை விண்ணப்பம்!

Published

on

காவல்துறையினர் இனி விடுமுறை எடுப்பதற்கு லீவ் லெட்டர் எழுத தேவையில்லை என்றும் அதற்கான உருவாக்கப்பட்டுள்ள செயலியில் பதிவு செய்தால் போதும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று காவல்துறையினர் விடுமுறை எடுப்பதற்கான ‘கிளாப்’ என்ற செயலியை அறிமுகம் செய்துவைத்தார். காவல்துறையினர் இந்த செயலியை தங்களது மொபைல் போனில் இன்ஸ்டால் செய்து கொண்டு அதன் மூலம் தங்களுக்கு தேவையான விடுமுறைகளை அவர்கள் எடுத்துக் கொள்ளலாம் என்றும் இந்த செயலியில் பதிவு செய்யப்படும் விடுமுறை விண்ணப்பம் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு சென்று சேரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் காவலர்கள் விடுமுறை எடுக்க வேண்டும் என்றால் நேரடியாக காவல் நிலையத்திற்கு வந்து லீவு லெட்டர் எழுதி தான் விடுமுறை எடுக்க வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் தற்போதைய டிஜிட்டல் உலகில் காவல்துறையினர் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே இந்த செயலி மூலம் விடுமுறையை தங்கள் மேலதிகாரிகளுக்கு அறிவித்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செயலி மூலம் காவல்துறையினர் அவர்களுடைய சாதாரண விடுமுறை மட்டுமின்றி மருத்துவ விடுமுறை உள்பட எந்த விடுமுறையாக இருந்தாலும் இந்த செயலியில் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் விடுமுறையை பதிவு செய்தபின் அதற்கான பதிலை உயரதிகாரிகளும் செயலியின் மூலமே பதிவு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செயலி காவல்துறையினர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version