சினிமா

14 கோடி மக்கள் பார்த்துள்ளனர் 2.0 டீசர், டிரைலர்

Published

on

லைகா நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் படம் 2.0. பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி, அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 2010ஆம் ஆண்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் ஆன, எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக 2.0 உருவாகி வருகிறது.

2.0 திரைப்படத்தினை லைகா நிறுவனம் 543 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்துள்ள நிலையில் இந்தியாவின் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகிய படம் என்ற பெருமையினையும் பெற்றுள்ளது.

நவம்பர் 29-ம் தேதி திரைக்கு வரும் இந்தப் படம் உலகமெங்கிலும் பத்தாயிரம் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. அதோடு, தமிழகத்தில் இந்தப் படத்தின் 3டி படம், 300 தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் டீசர் நவம்பர் 3-ம் தேதியும், டிரைலர் வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில் டீசர், டிரைலர் இரண்டையும் பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், யுடியூ போன்ற சமூக வலைத்தளங்களில் இதுவரை 14கோடி பேர் பார்த்துள்ளதாகப் படக்குழு பெருமையுடன் தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version