சினிமா செய்திகள்
பிரியா வாரியருக்கு மவுசு குறைந்து விட்டதா?
ஒரு அடார் லவ் படத்தின் ஒற்றைக் கண் சிமிட்டல் காட்சி கடந்த ஆண்டு காதலர் தினத்தன்று வெளியானது. அந்த ஒற்றைக் காட்சியை இந்திய இளைஞர்கள் தூக்கிக் கொண்டாடி ஓவர் நைட்டில் பிரியா வாரியரை பாலிவுட் வரை செல்லும் அளவிற்கு பிரபலப்படுத்தினர்.
ஆனால், தற்போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறிப் போயுள்ளதாம், ஒரு அடார் லவ் படத்தின் ரிலீசுக்கு பிறகு, பிரியா வாரியரின் நடிப்பால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு பெரிதாக வரவேற்பில்லை என்றும், சிலர் சும்மா இப்படி போஸ் கொடுத்து ஏமாற்றும் வேலையை விடுத்து, நல்லா நடிக்க கத்துக்கோங்க என கமெண்டும் பதிவிட்டு வருகின்றனராம்.
இதனால், பிரியா வாரியர் கடும் அப்செட்டில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.