சினிமா செய்திகள்
ஷங்கருக்கு ’நோ’, ராஜமெளலிக்கு ’யெஸ்’ சொன்ன பாலிவுட் நடிகர்!
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்திற்கு பிரபல பாலிவுட் ஹீரோவான அஜய்தேவ்கனை நடிக்க ஷங்கர் அழைத்திருந்தார். ஆனால், சில பல காரணங்களுக்காக அஜய்தேவ்கன் ஷங்கருக்கு கால்ஷீட் தரவில்லை.
இந்நிலையில், ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க அஜய்தேவ்கன் சம்மதம் தெரிவித்துள்ளார்.
300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் அஜய்தேவ்கன் நடிக்கும் காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளதாக தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.