Connect with us

உலகம்

ஒரு இரவு தங்குவதற்கு ரூ.82 லட்சம்.. உலகின் மிக ஆடம்பரமான ரிசார்ட்..!

Published

on

உலகிலேயே மிகவும் அதிக வசதி உள்ள மிகவும் காஸ்ட்லியான ரிசார்ட் குறித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

துபாயில் உள்ள அட்லாண்டிஸ் தி ராயல் என்ற சொகுசு ரிசார்ட் அறைகள் கொண்ட ஹோட்டல் சமீபத்தில் திறக்கப்பட்டது. இந்த ஹோட்டலில் தங்குவதற்கு அதிகபட்சமாக ஒரு இரவுக்கு 1000000 டாலர் அதாவது 85 லட்சம் ரூபாய் வரை கட்டணமாக பெறப்படுகிறது. அதிநவீன வசதியுடன் இயற்கை எழில் கொஞ்சம் கடல் பகுதியில் அமைந்துள்ள இந்த ஹோட்டல் வெளியில் இருந்து பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக இருக்கும் என்பது உள்ளே பல மடங்கு பிரம்மாண்டமாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கண்ணாடி சுவர்களுக்குள் தண்ணீர் கொட்டும் ஆச்சரியம், அவ்வப்போது நெருப்பு எரியும் அதிசயம் ஆகியவை இந்த சொகுசு ரிசார்ட்டில் உள்ளது. துபாயில் அமைந்துள்ள இந்த சொத்தின் மதிப்பு 1.2 பில்லியன் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு நொடியும் நம்ப முடியாத அளவுக்கு இந்த ரிசார்ட் புதுப்புது அனுபவங்களை தந்து கொண்டிருப்பதாகவும் கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்ட இந்த ரிசாட்டில் தங்குவதற்கு 795 அறைகள் உள்ளது என்றும் கூறப்படுகிறது.

நீங்கள் அறையில் இருந்தால் போதும் உங்களுக்கு வேண்டிய அனைத்தும் அறையை தேடி வரும் என்றும் நீர் ஊற்றுக்கள், ஷாப்பிங் செய்யும் பிரமாண்டமான மால் உட்பட பல ஆச்சரியமான விஷயங்கள் இந்த பொழுதுபோக்கு ரிசார்ட்டில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை வாழ்க்கையில் பார்த்திடாத ஆடம்பரமான குளியல் அறை சிறிய நீச்சல் குளம் ஆகியவை கொண்ட இந்த அறையில் அதிநவீன லேட்டஸ்ட் வசதிகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 22 மாடிகள் அடங்கிய இதில் திறந்தவெளி இசை கிளப் ஒன்று உள்ளது என்றும் அதில் கடலின் காற்றை அனுபவித்து கொண்டே இசையை ரசிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் இதுவரை இல்லாத ஆடம்பரமான ஸ்பா உள்ளது என்பதும் பிரமிக்க வைக்கும் அளவுடன் கூடிய இதில் ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக அனுபவிக்கும் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டால்பின்களுடன் கூடிய தியான அறை, நீர் பூங்கா உள்பட பல ஆச்சரியமான வசதிகள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் தங்கும் விருந்தினர்கள் அறையில் இருந்து கொண்டே பாரசீக வளைகுடாவை பார்த்து ரசிக்கலாம் என்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட ஜுமாரா தீவுக் கூட்டத்தின் விளிம்புகளையும் கோடீஸ்வரர்கள் மற்றும் அரச குடும்பங்களின் மாளிகையையும் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டிடத்தை கட்டுவதற்கு 8வருடங்கள் ஆனது என்றும் இந்த ரிசார்ட் உலகின் மிகப்பெரிய அதிசயங்களில் ஒன்று என்றும் கூறப்படுகிறது.

இந்தியா59 நிமிடங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்1 மணி நேரம் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா2 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்2 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!