Connect with us

தமிழ்நாடு

விசிகவில் இணைகிறாரா காயத்ரி ரகுராம்? திருமாவளவனுடன் திடீர் சந்திப்பு!

Published

on

சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை நேற்று திடீரென சந்தித்தார். இந்த சந்திப்பையொட்டி அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைய அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

#image_title

திருச்சி சூர்யா – டெய்சி இடையேயான அநாகரிகமான ஆடியோ வெளியான விவகாரத்தில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி பேசியதாக காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனையடுத்து தன் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்த காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார்.

பாஜகவில் இருந்து விலகிய பின்னர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை டார்கெட் செய்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் காயத்ரி ரகுராம். இந்நிலையில் அவர் வேறு கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாக பேசப்பட்டது. அதே நேரத்தில் விசிக தலைவர் திருமாவளவன் குறித்தும் பாராட்டி பேசி இருந்தார். அரசியல் அனுபவத்திலும், மக்கள் ஆதரவிலும் மிகப்பெரிய தலைவராய் உள்ள திருமாவளவன் என் மனதில் உயர்ந்துவிட்டார் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் காயத்ரி ரகுராம் சென்னை அம்பேத்கர் திடலில் வைத்து நேற்று திருமாவளவனை சந்தித்தார். அப்போது காயத்ரிக்கு ‘உலக வரலாற்றில் பெண்கள்’ என்ற புத்தகத்தை பரிசாக வழங்கிய திருமாவளவன் ஏப்ரல் 14-ஆம் தேதி காயத்ரி ரகுராம் தொடங்கவிருக்கும் சக்தி யாத்ரா வெற்றி பெறவும் வாழ்த்தினார்.

இதனையடுத்து காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில், ஆதரவு அளித்த விசிக தலைவர், எம்.பி., அண்ணா தொல் திருமாவளவன் அவர்களுக்கும், விசிகவுக்கும் எனது நன்றிகள். மரியாதை நிமித்தமான அற்புதமான சந்திப்பு இது என பதிவிட்டுள்ளார். இதனையடுத்து காயத்ரி ரகுராம் விசிகவில் இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (20/10/2024)

வணிகம்1 நாள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்3 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)