சினிமா செய்திகள்
பாகிஸ்தான் பாடகரை நீக்குங்கள் – சல்மான் அதிரடி உத்தரவு
சல்மான் கான் நடிப்பில் பாரத் படம் வரும் ரம்ஜானுக்கு ரிலீசாக உள்ளது. பாரத் படத்தை தொடர்ந்து நோட்புக் என்ற படத்தில் சல்மான் கான் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக ஒரு பாடலை பாடி முடித்துள்ள அஸ்லாம் என்பவரை உடனடியாக நீக்குங்கள் என தயாரிப்பு நிறுவனத்துக்கு சல்மான் கான் உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அகில இந்திய சினிமா தொழிலாளர் சங்கம், பாகிஸ்தான் நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் இனி இந்திய படங்களில் பணிபுரிய கூடாது என அறிவித்திருந்தது.
இந்நிலையில், நோட்புக் படத்திற்காக ஒரு பாடலை பாடிய அஸ்லாம் எனும் பாகிஸ்தான் பாடகரை படத்தில் இருந்து நீக்கிவிட்டு, புதிய பாடகரை கொண்டு அந்த பாடலை பதிவு செய்யுமாறு சல்மான் கான் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.