சினிமா செய்திகள்
Varisu OTT Release: ஒடிடியில் ரிலீஸாகும் விஜயின் வாரிசு படம்!
இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான திரைப்படம் வாரிசு. இந்த திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதியன்று பொங்கலன்று விஜய் ரசிகர்களுக்குப் பரிசாக வெளியானது. மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா,ஜெயசுதா, உள்ளிட்ட மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்கு ஒரே நாளில் வெளியான விஜய்யின் வரிசு மற்றும் அஜித்குமாரின் துணிவு என தமிழ் சினிமா மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் மோதலுக்கு சாட்சியாக இருந்தது. இரண்டு படங்களும் திரையரங்குகளில் கிட்டத்தட்ட ஒரு மாதம் ஓடிவிட்டதால், 250 கோடிக்கு மேல் வசூல் செய்த துணிவு மீது உலகளவில் ₹300 கோடிக்கும் அதிகமான மொத்த வருவாயுடன் வாரிசு தெளிவான பாக்ஸ் ஆபிஸ் வெற்றியாளராக உருவெடுத்துள்ளது.
இதற்குமுன் 2014ஆம் ஆண்டு வீரம் – ஜில்லா படங்கள் நேருக்கு நேர் பொங்கல் ரிலீசாக மோதியதை அடுத்து கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு படங்கள் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஒரே நாளில் ரிலீசாகினது என்பது உறிப்பிட்டத்தக்கது.
hold tight because the wait is over!
here he comes ????#VarisuOnPrime, Feb 22
coming soon in Tamil, Telugu and Malayalam!#Thalapathy @actorvijay @directorvamshi @iamrashmika @MusicThaman @karthikpalanidp pic.twitter.com/AM8xYn44bi— prime video IN (@PrimeVideoIN) February 17, 2023
இந்நிலையில், தற்போது வாரிசு படம் வரும் பிப்ரவரி 22ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் ஆகிய பக்கங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அஜித் நடித்த துணிவு படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி டாப் 5 யில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பெரும்பான்மையான ரசிகர்களுக்கு ‘வாரிசு’ படம் பிடித்திருந்தது. திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த திரைப்படம் வசூல் ரீதியாக 300 கோடியை எட்டி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.