Connect with us

சினிமா செய்திகள்

Thunivu in Netflix: நெட்ஃபிளிக்ஸில் சாதனை படைத்த துணிவு!

Published

on

கொரோனா காலத்திற்குப் பிறகு இந்தியாவில் OTT தளத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது என்று கூறலாம். முன்பெல்லாம் டிவி மற்றும் சினிமா தியேட்டர்கள் என்று இருந்த மக்கள், தற்போது ஒரு படம் வெளியான பிறகு எந்த OTT தளத்தில் வெளியாகும் என்று கேட்கும் அளவுக்கு பிரபலமாகி விட்டது. மேலும் ரசிகர்களைக் கவரும் வகையில் வெளிவரும் முன்னணி நடிகர்களின் படங்களை அதிக விலை கொடுத்து OTT தளங்களும் வாங்குகின்றன.

அதேப்போல் அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படம் துணிவு. கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் இல் வெளியானது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பிரிவிலும் டாப் 10 பட வரிசையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வெளியிடும். அந்த வகையில் பிப்ரவரி 6 முதல் 12 வாரத்திற்கான பட வரிசையில் துணிவு (தமிழ்) 3வது இடமும், துணிவு (இந்தி) 4வது இடமும் பெற்று சாதனைப் படைத்துள்ளது. ஒரு இந்திய திரைப்படம் “டாப் 5க்குள்” இரண்டு இடங்களைப் பெற்றது இதுவே முதல் முறையாகும்.

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பின் தயாரிப்பாளர் போனி கபூர்- இயக்குநர் ஹெச்.வினோத் – நடிகர் அஜித் ஆகியோர் மூன்றாவது முறை கூட்டணியில் உருவான படம் “துணிவு. வாரிசுக்கு போட்டியாக பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 11 வெளியானது. இந்த படத்தில் ஹீரோயினாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். ஜான் கொக்கைன், சமுத்திரகனி, ஜி.எம்.சுந்தர், பகவதி பெருமாள், வீரா, அஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படத்தில் ‘சில்லா சில்லா’, ‘காசேதான் கடவுளடா’, ‘கேங்ஸ்டா’ ஆகிய பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. துணிவு படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அஜித் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது. மங்காத்தாவுக்கு பிறகு அஜித் க்ரே கதாபாத்திரமாக நடிக்கும் இப்படம், கிரெடிட் கார்டு, வங்கி மோசடி என பல்வேறு விஷயங்கள் தொடர்பான மோசடிகளை வெளிக்கொணரும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.

துணிவு இதுவரை உலகளவில் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்து உலக அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
சினிமா50 நிமிடங்கள் ago

கோல்ட் கேஸ்: ஓடிடி திரையை உலுக்கிய மர்ம திரில்லர்!

ஜோதிடம்1 மணி நேரம் ago

6 நாளில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், அதிர்ஷ்டம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
மாத பலன்1 மணி நேரம் ago

ஆவணி மாத ராசி பலன் 2024!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்23 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்23 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு24 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா24 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்24 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு24 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்6 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்4 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!