சினிமா செய்திகள்
விஜய்சேதுபதி அவுட், கார்த்தி இன் – பொன்னியின் செல்வன் அப்டேட்!
தமிழ் திரையுலகின் நீண்ட நாள் கனவான பொன்னியின் செல்வன் படத்தை எடுத்தே தீருவேன் என்ற முயற்சியில் மணிரத்னம் இறங்கியுள்ளார்.
இந்த படத்தில் விஜய்சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அவர் தற்போது அதிலிருந்து வெளியேறி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ஆயிரத்தில் ஒருவன் படத்தில் அற்புதமாக நடித்திருந்த கார்த்தி, பொன்னியின் செல்வன் படத்திற்கு கச்சிதமாக இருப்பார் என்றும், மணிரத்னத்தின் முன்னாள் உதவி இயக்குநர் என்பதால், கார்த்தியை பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க வைக்கும் பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருவதாகவும், கோலிவுட்டின் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
மேலும், விக்ரம், ஜெயம் ரவி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோரும் இந்த பிரம்மாண்ட புராஜெக்டில் இடம்பெறுவர் என்றும் கூறப்படுகிறது.