Connect with us

இந்தியா

வரலாறு காணாத சாதனை.. ஜனவரியில் மியூச்சுவல் ஃபண்ட் சேமிப்பு எத்தனை கோடி தெரியுமா?

Published

on

இந்தியர்கள் மத்தியில் தற்போது நாளுக்கு நாள் மியூச்சுவல் ஃபண்ட் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது என்பதையும் ஒவ்வொரு மாதமும் மியூச்சுவல் ஃபண்ட் மூலம் சேமிக்கப்படும் தொகை அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் மியூச்சுவல் ஃபண்ட் முறையில் சேமிக்கப்பட்டு இருக்கும் தொகை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மட்டும் எஸ்ஐபி மூலம் 13,856 கோடி முதலீடுகள் எட்டியுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்தம் சுமாராக 6.2 கோடி எஸ்ஐபி கணக்குகள் உள்ளன என்றும் இதன் மூலம் முதலீட்டாளர்கள் இந்திய மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகிறார்கள் என்றும் இந்திய மியூச்சுவல் ஃபண்டுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு ஜனவரியில் மட்டும் 13,856 கோடியை எஸ்ஐபிய்யில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. சந்தை ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும் சில்லறை முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்டில் தொடர்ந்து முதலீடு செய்வது அவர்கள் மியூச்சுவல் ஃபண்ட் மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 ஆயிரம் கோடிக்கு மேல் எஸ்ஐபி மூலம் முதலீடு செய்யப்படுவது தொடர்ச்சியாக இது நான்காவது மாதம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து எஸ்ஐபி மூலம் முதலீடுகள் செய்யப்பட்ட தொகை பின்வருமாறு.

ஜனவரி 2022-ரூ 11,517 கோடி

பிப்ரவரி 2022- ரூ.11,438 கோடி

மார்ச் 2022-ரூ 12,328 கோடி

ஏப்ரல் 2022- ரூ.11,863 கோடி

மே 2022- ரூ 12,286 கோடி

ஜூன் 2022- ரூ 12,276 கோடி

ஜூலை 2022- ரூ 12,140 கோடி

ஆகஸ்ட் 2022- ரூ 12,693 கோடி

செப்டம்பர் 2022- ரூ 12,976 கோடி

அக்டோபர் 2022- ரூ 13,041 கோடி

நவம்பர் 2022-ரூ 13,306 கோடி

டிசம்பர் 2022- ரூ 13,573 கோடி

ஜனவரி 2023-ரூ 13,856 கோடி

2023ஆம் ஆண்டில் முதலீட்டாளர்கள் சந்தை ஏற்ற இறக்கத்தின் காரணமாக சிறிய, பெரிய மற்றும் மிட்கேப் நிதிகளில் முதலீடு செய்துள்ளனர். இது ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் வரத்து அதிகரிக்க வழிவகுத்துள்ளது. மேலும் இந்தியாவின் மியூச்சுவல் ஃபண்டுகள் சங்கத்தின் (AMFI) சமீபத்திய புள்ளிவிவரங்கள், பங்கு மற்றும் பங்கு-இணைக்கப்பட்ட திட்டங்களில் நிகர முதலீடுகள் வியக்கத்தக்க வகையில் 71% அதிகரித்து 2022 டிசம்பரில் ரூ.7,303 கோடியிலிருந்து ரூ.12,547 கோடியாக உயர்ந்துள்ளது என அறிக்கை தெரிவிக்கின்றது.

எஸ்ஐபி தவிர, ஈக்விட்டி இன்ஃப்ளோக்களைப் பொருத்தவரை, சமீபத்திய ஈக்விட்டி இன்ஃப்ளோ ரூ. 12,000 கோடிக்கு மேல் கடந்த எட்டு மாதங்களில் காணப்பட்ட அதிகபட்ச முதலீடுகள் ஆகும். இது ஒரு குறிப்பிடத்தக்க அதிகரிப்பு மற்றும் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களிடையே வளர்ந்து வரும் நம்பிக்கையைக் குறிப்பதாக நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.

சந்தை ஏற்ற இறக்கம் இருந்தாலும். மிட்-கேப்ஸ், லார்ஜ்-கேப்ஸ், ஸ்மால்-கேப்ஸ், மல்டி-கேப்ஸ், ஃப்ளெக்ஸி-கேப்ஸ் மற்றும் அனைத்து வகையான ஈக்விட்டி செக்மென்ட்கள் உட்பட, பங்குச் சந்தையின் அனைத்துப் பிரிவுகளிலும் நேர்மறையான முதலீடுகளை பார்ப்பது ஆச்சரியமாக உள்ளது.

வேலைவாய்ப்பு2 நிமிடங்கள் ago

ரூ.61 லட்சம் சம்பளத்தில் SBI வங்கியில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 1040

பர்சனல் ஃபினான்ஸ்49 நிமிடங்கள் ago

நீங்கள் எந்த ITR படிவம் பயன்படுத்தி வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் தெரியுமா?

பர்சனல் ஃபினான்ஸ்2 மணி நேரங்கள் ago

வருமான வரி தாக்கல் செய்துவிட்டீர்களா? ரீஃபண்டு எப்போது கிடைக்கும் தெரியுமா?

பர்சனல் ஃபினான்ஸ்2 மணி நேரங்கள் ago

வருமான வரி தாக்கல் செய்வது எப்படி?

வணிகம்12 மணி நேரங்கள் ago

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கம்!

வணிகம்12 மணி நேரங்கள் ago

வருமான வரி தாக்கலில் இருந்து இவர்களுக்கு மட்டும் விலக்கு! எப்படி?

தினபலன்14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 19, 2024)

இந்தியா22 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்23 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்3 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை3 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்1 நாள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

உலகம்3 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

பல்சுவை6 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!