Connect with us

இந்தியா

பிரதமர் மோடியும், அதானியும்: பின்னணி குறித்து ராகுல் காந்தி கிடுக்குப்பிடி கேள்வி!

Published

on

ஹிண்டென்பெர்க் ஆய்வு நிறுவனம் அதானி குழுமத்தின் பங்குச்சந்த மோசடிகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ள இந்த விவகாரத்தின் எதிரொலியாக அதானி குழும பங்குகள் கடும் சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கும், அதானிக்கும் உள்ள விவகாரங்கள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து பேசிய ராகுல் காந்தி, அதானி குழுமம் தற்போது 8-10 துறைகளில் இயங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த 2014-இல் வெறும் 8 பில்லியன் டாலராக இருந்த அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு தற்போது 140 பில்லியன் டாலராக எப்படி உயர்ந்தது என இளைஞர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

விமான போக்குவரத்து துறையில் அனுபவம் உள்ள ஒருவருக்கு மட்டுமே விமான நிலையங்களை மேம்படுத்தும் பொறுப்பை வழங்க வேண்டும் என்ற விதியை பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் மாற்றி 6 விமான நிலையங்கள் அதானியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை வைத்து ஜி.வி.கே நிறுவனத்திடம் இருந்து மிகவும் லாபகரமான விமான நிலையமான மும்பை விமான நிலையத்தை அபகரித்து அதானியிடம் கொடுத்துள்ளது மத்திய அரசு என பேசினார் ராகுல் காந்து.

மேலும் பிரதமர் மோடிக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பிய அவர், அதானியுடன் எத்தனை முறை ஒன்றாக வெளிநாட்டு பயணம் செய்தீர்கள்? உங்கள் பயணத்தில் எத்தனை முறை அதானி உங்களுடன் இணைந்து கொண்டார்? வெளிநாட்டில் எத்தனை முறை நீங்கள் சந்தித்துக் கொண்டீர்கள்? அதானி எத்தனை வெளிநாட்டு ஒப்பந்தங்கள் எடுத்துள்ளார்? கடந்த 20 ஆண்டுகளில் அதானி பாஜகவுக்கு எவ்வளவு பணம் கொடுத்துள்ளார் என பல கேள்விகளை எழுப்பினார்.

தொடர்ந்து ஆவேசமாக பேசிய ராகுல் காந்தி, இந்தியாவின் வெளியுறவு கொள்கையே அதானிக்காக மாற்றப்பட்டது. அதானி குழுமம் டிரோன் தயாரிப்பில் ஈடுபட்டதே இல்லை. ஆனால் மோடி இஸ்ரேல் சென்ற உடனே அதானிக்கு அந்த ஒப்பந்தம் கிடைக்கிறது. ஆஸ்திரேலியா சென்ற உடன் எஸ்பிஐ வங்கி 1 பில்லியன் கடன் வழங்குகிறது. இவ்வாறு ராகுல் காந்தி பல கிடுக்குப்பிடி கேள்விகளை ஆவேசமாக எழுப்ப பாஜக எம்பிக்கள் அவரை பேச விடாமல் அமளியில் ஈடுபட்டனர்.

ஜோதிடம்1 மணி நேரம் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு2 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!