Connect with us

கிரிக்கெட்

சிங்கப்பெண்களின் ஐபிஎல் தொடங்கும் தேதி அறிவிப்பு.. முதல் போட்டி எந்தெந்த அணிகளுக்கு இடையே தெரியுமா?

Published

on

இந்தியாவில் ஆண்களுக்கான ஐபிஎல் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு முதல் மகளிர் ஐபிஎல் நடைபெறும் என்றும் சமீபத்தில் மகளிர் ஐபிஎல் அணிகளுக்கான ஏலம் நடந்தது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் மகளிர் ஐபிஎல் தொடங்கும் தேதி குறித்த தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் ஐபிஎல் போட்டி என்பதை ஒரு விளையாட்டாக ரசிகர்கள் பார்க்காமல் ஒரு திருவிழா போல் அதை பார்த்து வருகின்றனர் என்பதும் ஆண்களுக்கான ஐபிஎல் போட்டி உலகில் மிகவும் வருமானம் தரும் விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றாக இருந்து வருகிறது என்பதும் தெரிந்ததே.

ஆண்களுக்கு மட்டுமே நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் போட்டிகளை பெண்களுக்கும் நடத்த வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வந்ததை அடுத்து 2023 ஆம் ஆண்டு முதல் பெண்கள் ஐபிஎல் தொடர் நடத்தப்படும் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது. இதனை அடுத்து முதல் சீசனுக்கான அணிகளின் ஏலம் முடிந்த நிலையில் முதல் சீசனுக்கான வீராங்கனைகளின் ஏலம் வரும் 13ஆம் தேதி நடைபெற உள்ளது.

#image_title

இந்த நிலையில் இந்த ஏலத்தில் மொத்தம் 1500 வீராங்கனைகள் பங்கேற்பதாகவும் இந்தியா உட்பட உலகின் முக்கிய நாடுகளில் உள்ள வீராங்கனைகளை ஏலம் விடப்படும் என்றும் கூறப்படுகிறது. முதலாவது மகளிர் ஐபிஎல் தொடரில் 5 அணிகள் மட்டும் பங்கேற்க உள்ளதாகவும் இந்த ஐந்து அணிகளிலும் சேர்த்து சுமார் 100 வீராங்கனைகள் ஏலம் எடுக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மகளிர் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 4ஆம் தேதி தொடங்கி மார்ச் 26 ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஒவ்வொரு அணியும் 15 முதல் 18 வீராங்கனைகளை தேர்வு செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.

தற்போது இந்திய அணி, மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆடிவரும் நிலையில் அதில் உள்ள வீராங்கனைகள் பல தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 4-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் பெண்கள் தொடரின் முதல் ஆட்டம் குஜராத் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையே நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய மூன்று ஐபிஎல் அணி உரிமையாளர்களைத் தவிர, காப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் (லக்னோ) மற்றும் அதானி ஸ்போர்ட்ஸ்லைன் ஆகிய ஐந்து உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.

அடுத்த மாதம் நடைபெறும் வீரர்கள் ஏலத்தில் ஒவ்வொரு அணியும் ரூ.12 கோடிக்கு வீராங்கனைகளை ஏலம் எடுக்கலாம். குறைந்தபட்சம் 15 வீரர்களையும் அதிகபட்சம் 18 வீரர்களையும் ஏலம் எடுக்க வேண்டும். ஒரு அணியில் ஐந்து வெளிநாட்டு வீரர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

மகளிர் ஐபிஎல் முதல் சீசனில் மொத்தம் 22 ஆட்டங்கள் விளையாடப்படும் என்றும், லீக் கட்டத்தில் தரவரிசையில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு இன்னொரு போட்டி வைக்கப்பட்டு அதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா3 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்3 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு6 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி6 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!