சினிமா செய்திகள்
காக்க காக்க 2 – மீண்டும் ஜோதிகாவுடன் நடிக்கும் சூர்யா?
![kaka kaka - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/02/kaka-kaka.jpg)
இது பார்ட் 2 பட வாரம் என விரைவில் டிவிகளில் படங்களை போடும் அளவுக்கு பார்ட் 2 படங்களின் அணிவரிசை தமிழ் சினிமாவில் அநியாயத்துக்கு நீண்டு கொண்டு போகின்றன.
வெற்றி பெற்ற பழைய படங்களை தூசி தட்டி பார்ட் 2 எடுக்க அத்தனை இயக்குநர்களும் நடிகர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா ஜோதிகா நடிப்பில் வெளியாகி சூர்யாவுக்கு மாஸ் ஹீரோ அந்தஸ்த்தை கொடுத்த காக்க காக்க படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் எண்ணம் உதயமாகி இருப்பதாகவும், இந்த படத்தையும் கெளதம் மேனன் இயக்க, சூர்யாவுடன் நீண்ட நாட்களுக்கு பிறகு ஜோதிகாவே கதா நாயகியாகவும் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
என்.ஜி.கே, காப்பான் படங்கள் ரிலீசுக்கு ரெடியாகி உள்ள நிலையில், அடுத்ததாக காக்க காக்க 2 படத்தின் வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.