வணிகம்
விஸ்தராவின் 8-ம் ஆண்டு அதிரடி கொண்டாட்டம்.. ரூ.1899-க்கு உள்நாட்டு விமான பயணம்!
டாடா குழுமம் கீழ் செயல்பட்டு வரும் விஸ்தரா ஏர்லைன்ஸ் தங்களது 8வது ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு 1899 ரூபாய்க்கு உள்நாட்டு விமான டிக்கெட் கட்டணத்தை அறிவித்துள்ளது.
விஸ்தரா ஏர்லைன்ஸில் உள்நாட்டு விமான பயணம் செய்பவர்கள் எகானமி வகுப்பில் 1899 ரூபாய் கட்டணத்திலும், ப்ரீமியம் எகானமி வகுப்பில் 2,699 ரூபாய் கட்டணத்திலும், பிஸ்னஸ் கிளாஸ் வகுப்பில் 6,999 ரூபாய் கட்டணத்தில் பயணிக்கலாம்.
சர்வதேச விமான பயணிகள் டெல்லியிலிருந்து காத்மண்டு செல்ல 13,299 ரூபாய் கட்டணத்தில் பயணிக்கலாம். ப்ரீமியம் எகானமி கட்டணம் 16,799 ரூபாய். பிஸ்னஸ் கிளாஸ் கட்டணம் 16,799 ரூபாய்.
மேலும் விஸ்தராவில் பயணம் செய்யும் போது கூடுதல் கட்டணம் செலுத்திப் பெற வேண்டிய இருக்கைகள் மற்றும் லக்கேஜ் கட்டணங்களுக்கு 23 சதவிகிதம் வரையும் சலுகை வழங்குகிறது.
2023, ஜனவரி 23 முதல் 2023, செப்டம்பர் 30-ம் தேதி வரையிலான பயண டிக்கெட்களை 2023, ஜனவரி 12-ம் தேதி வரையில் புக் செய்யலாம்.
2013-ம் ஆண்டு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் டாடா குழுமங்கள் இணைந்து விஸ்தரா ஏர்லைன்ஸ் நிறுவனத்தைத் தொடங்கின. இப்போது விஸ்தரா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை ஏர் இந்தியாவுடன் இணைப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த இணைவு முழுமையடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஸ்தராவின் இந்த 8-ம் ஆண்டு அதிரடி கொண்டாட்ட டிக்கெட் சலுகையை www.airvistara.com, ஐஓஎஸ் ஆப், ஆண்டிராய்டு ஆப், விமான நிலைய டிக்கெட் கவுண்டர் மற்றும் டிராவல் ஏஜென்சிகள், ஆன்லைன் டிராவல் ஏஜென்சிகளில் மூலம் புக் பண்ணலாம்.