பர்சனல் ஃபினான்ஸ்
ஜனவரி – மார்ச் காலாண்டிற்கான சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதம் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?
ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான 4-ம் காலாண்டிற்கான, டைம் டெபாசிட், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் உள்ளிட்ட சில சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை வெள்ளிக்கிழமை மத்திய அரசு உயர்த்தி அறிவித்துள்ளது.
1 வருட டைம் டெபாசிட்
பிக்சட் டெபாசிட்டிற்கு இணையான 1 வருட டைம் டெபாசிட் திட்டத்திற்கான வட்டி விகிதத்தை 5.5 சதவிகிதத்திலிருந்து 1 சதவிகிதம் அதிகரித்து 6.6 சதவிகிதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2 வருட டைம் டெபாசிட்
2 வருட டைம் டெபாசிட் திட்டத்தின் வட்டி விகிதம் 5.7 சதவிகிதத்திலிருந்து 6.8 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
3 வருட டைம் டெபாசிட்
3 வருட டைம் டெபாசிட் திட்டத்தின் வட்டி விகிதம் 5.8 சதவிகிதத்திலிருந்து 6.9 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
5 வருட டைம் டெபாசிட்
5 வருட டைம் டெபாசிட் திட்டம் மீதான வட்டி விகிதம் 6.7 சதவிகிதத்தில் இருந்து 7 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம்
மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் மீதான வட்டி விகிதம் 7.6 சதவிகிதத்திலிருந்து 8 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மாத வருமானம் திட்டம்
மாத வருமான கணக்கு திட்டத்தின் வட்டி விகிதம் 6.7 சதவிகிதத்திலிருந்து 7.1 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தேசிய சேமிப்பு பத்திரம்
தேசிய சேமிப்பு பத்திரம் திட்டம் மீதான வட்டி விகிதம் 6.8 சதவிகிதத்திலிருந்து 7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
கிசான் விகாஸ் பத்ரா
கிசா விகாஸ் பத்ரா திட்டத்தில் 120 நாட்கள் முதலீடு செய்தால் 7.2 சதவிகித வட்டி விகித லாபம் கிடைக்கும்.
செல்வ மகள் திட்டம்
செல்வ மகள் திட்டம் என அழைக்கப்படும் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் மீதான வட்டி விகிதம் 7.6 சதவிகிதமாகவே தொடருகிறது.
பிபிஎப்
பொது வருங்கால வைப்பு நிதி என அழைக்கப்படும் பிபிஎப் திட்டம் மீதான வட்டி விகிதம் 7.1 சதவிகிதமாகவே தொடருகிறது.
சேமிப்பு கணக்கு
அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கில் டெபாசிட் செய்துள்ள பணத்துக்கு 4 சதவிகித லாபம் வழங்கப்படுகிறது.
குறிப்பு
சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு முறை மாற்றி அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.