கிரிக்கெட்
ஐசிசி தரவரிசை: இந்தியா அபாரம்; ஆஸ்திரேலியா பரிதாபம்!
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி தொடர் முடிவுக்கு வந்த நிலையில் ஐசிசி தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீரர்கள் அதிக ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
ஒருநாள் போட்டிகளுக்கான அணிகள் தரவரிசையில் இங்கிலாந்து அணி 126 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியா 122 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. ஆஸ்திரேலிய அணி 100 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது.
ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் விராட் கோலி 887 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 854 புள்ளிகளுடன் ரோஹித் ஷர்மா இரண்டாவது இடத்திலும், 744 புள்ளிகளுடன் ஷிகர் தவான் 10-வது இடத்திலும் உள்ளனர். இதில் முதல் 10 இடங்களில் ஒரு ஆஸ்திரேலிய வீரர் கூட இடம்பெறவில்லை.
ஒருநாள் போட்டிக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் பும்ரா 808 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 719 புள்ளிகளுடன் குல்திப் யாதவ் 4-வது இடத்திலும், 709 புள்ளிகளுடன் சாஹல் 5-வது இடத்திலும் உள்ளனர். இதில் 10-வது இடத்தை ஆஸ்திரேலிய வீரர் ஹசல்வுட் பிடித்துள்ளார்.
ஐசிசி வெளியிட்டுள்ள இந்த தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்களின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது. ஒரு காலத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஆதிக்கம் நிறைந்த தரவரிசை பட்டியல் தற்போது அதற்கு எதிர்மாறான நிலையில் உள்ளது. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களால் முதல் 10 இடங்களுக்குள் வர முடியவில்லை. பந்துவீச்சில் 10-வது இடத்தை தான் பிடிக்கவும் முடிந்துள்ளது அவர்களால்.