Connect with us

சினிமா செய்திகள்

குட்டிக்கதை, பிளையிங் கிஸ், போட்டியாளர்: ‘வாரிசு’ ஆடியோ விழாவில் விஜய்யின் சுவாரஸ்ய பேச்சு!

Published

on

தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் விஜய் வழக்கம்போல குட்டி கதை மற்றும் என் நெஞ்சில் குடியிருக்கும் என்ற வசனம் மற்றும் பிளையிங் கிஸ் கொடுத்து அரை மணி நேரம் பேசி அசத்தியுள்ளார்.

தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த நிலையில் இந்த விழாவில் விஜய் சரத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இந்த விழாவில் விஜய் பேசிய போது, ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

குறிப்பாக தில் ராஜூ இன்னும் அதிகமாக தமிழ் படங்களை தயாரிக்க வேண்டும் என்றும், அதே போல் இயக்குனர் வம்சி மிகவும் பெர்பெக்ட்டான இயக்குனர் என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.

அதன்பிறகு அவர் வழக்கம்போல் தனது குட்டிகதையை ஆரம்பித்தார். அந்த கதையில் ஒரு அப்பா அம்மா அண்ணன் தங்கை என அன்பாக இருந்த ஒரு குடும்பத்தில் அப்பா வேலைக்கு சென்றுவிட்டு தினமும் இரண்டு சாக்லேட் வாங்கி வருவார் என்றும் அந்த சாக்லெட்டில் ஒன்றை அண்ணனுக்கும் இன்னொன்றை தங்கைக்கும் கொடுப்பார் என்றும் கூறினார். தங்கை உடனே சாக்லேட்டை சாப்பிட்டு விடுவார் என்றும் ஆனால் அண்ணன் ஒரு இடத்தில் ஒளித்து வைத்திருக்கும் நிலையில் அந்த சாக்லேட்டையும் தங்கை சாப்பிட்டு விடுவார் என்றும் தெரிவித்தார். இதனையடுத்து அந்த குட்டி பாப்பா ஒரு நாள் தனது அண்ணனிடம் அன்பு என்றால் என்ன? என்று கேட்க அதற்கு நீ என்னுடைய சாக்லேட்டை சாப்பிடுவாய் என்று தெரிந்தும் அதே இடத்தில் வைக்கின்றேனே அதுதான் அன்பு என்று கூறியதாக விஜய் தனது குட்டி கதையை முடித்து கொண்டார்.

இந்த கதையில் இருந்து அன்பு என்பது ஒரு வலுவான ஆயுதம் என்றும் அந்த ஆயுதத்தை நீங்கள் எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் வாரிசு திரைப்படமும் அது சம்பந்தமாக தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் திரையுலகை பொறுத்தவரை விஜய்க்கு போட்டி அஜித் தான் என்ற நிலையில் தனது போட்டியாளர் யார் என்பதையும் அவர் பகிரங்கமாக அறிவித்துள்ளார். 1990ஆம் ஆண்டு நான் திரையுலகில் அறிமுகமான போது எனது போட்டியாளரும் அறிமுகமானார் என்றும் அவரை நான் முந்த வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைப்பேன் என்று கூறிய விஜய் அந்த போட்டியாளர் ஜோசப் விஜய் என்று தெரிவித்துள்ளார். ஒவ்வொருவரும் தங்களை போட்டியாளராக நினைத்துக் கொண்டு முன்னேற வேண்டும் என்றும் இன்னொருவரை போட்டியாளராக நினைத்தால் நம்முடைய உயரம் என்ன என்று நமக்குத் தெரியாமலேயே போய்விடும் என்றும் தெரிவித்தார் .

மேலும் ‘வாரிசு’ படத்தில் குஷ்பு ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருக்கிறார் என்று கூறிய விஜய், குஷ்பு என்றாலே தனக்கு சின்னத்தம்பி திரைப்படம் தான் ஞாபகம் வருகிறது என்று கூறிய அவர் அந்த படத்தை தனது கேர்ள் பிரண்டுடன் பார்த்ததாக தெரிவித்தார். அப்போது தொகுப்பாளினி ’யார் அந்த கேர்ள் பிரண்ட்? என்று கேட்டபோது விஜய் வெட்கப்பட்டது பார்ப்பதற்கு சுவராசியமாக இருந்தது.

இதனை அடுத்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜூ ரசிகர்களுடன் ஒரு செல்பி புகைப்படம் ஒன்றை எடுத்து அதனை உங்களது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதனை அடுத்து அவரிடமே செல்போனை வாங்கி ரசிகர்களுடன் செல்பி வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது விஜய்யின் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ஏராளமான அளவில் லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ட்விட்டை என் நெஞ்சில் குடியிருக்கும் என்ற ஹேஷ்டேகுடன் பதிவு செய்யுங்கள் என்றும் அவர் தனது அட்மின் ஜெகதீஷ் இடம் தெரிவித்துள்ளார்.

மேலும் விஜய் தனது மேடையில் இருந்தபடியே ரசிகர்களுக்கு பிளையிங் கிஸ் கொடுத்தார். நாலாபக்கமும் அவர் பிளையிங் கிஸ் கொடுத்த நிலையில் ரசிகர்களின் கரகோஷம் விண்ணை பிளந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த விழாவில் ரசிகர்கள் ரசிகர்களின் ரத்த தானம் குறித்து பேசினார். ரத்த தானம் என்பது மிகவும் நல்ல ஒரு விஷயம் என்றும் ரத்தத்திற்கு ஏழை பணக்காரன் சாதி மதம் என்ற பாகுபாடு கிடையாது என்றும் எனவே ரத்தத்தில் இருந்து நாம் அறிந்த ஒரு நல்ல குணத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

மொத்தத்தில் விஜய்யின் அரைமணி ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழா பேச்சு ரசிகர்களை குஷியாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா40 நிமிடங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்1 மணி நேரம் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு4 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி6 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!