பிற விளையாட்டுகள்
FIFA உலகக் கோப்பை 2022: சாம்பியன் பட்டம் வென்றது அர்ஜென்டினா.. செய்த சாதனைகள் என்னென்ன?
கத்தாரில் நடைபெற்று வந்த FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரில், லியோனில் மெஸ்ஸி தலையிலான அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
FIFA உலகக் கோப்பை கோப்பை இறுதி போட்டி இன்று பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் நடைபெற்றது. மிகப் எதிர்பார்ப்புக்கு இடையில் நடைபெற்ற இந்த போட்டியில் அர்ஜென்டினா – பிரான்ஸ் அணிகள் 3-3 கோல் அடித்து சமநிலை ஆனது.
பின்னர் கூடுதல் நேரம் வழங்கப்பட்டும், ஆட்டம் டிரா ஆனது. எனவே பெனால்டி ஷாட் வழங்கப்பட்டது.
அதில் 4-2 கோல் என்ற கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி லியோனில் மெஸ்ஸி தலையிலான அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
36 ஆண்டுகளுக்கு பிறகு FIFA உலகக் கோப்பை போட்டியை அர்ஜென்டினா மூன்றாம் முறையாக வென்றுள்ளது. இதற்கு முன்னதாக 1986 மற்றும் 1978-ம் ஆண்டு அர்ஜென்டினா உலகக் கோப்பை கால்பந்து போட்டியை வென்று இருந்தது.
இன்றைய உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடியதன் மூலம், அதிகபட்சமாக 26 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி மெஸ்ஸி புதிய சாதானை படைத்துள்ளார். முன்னதாக ஜெர்மனியின் முன்னாள் கால்பந்து வீரர் லோதர் மாத்தூஸ் 25 FIFA உலகக் கோப்பை போட்டியில் விளையாடி இருந்தார்.
பிரான்ஸ் முன்கள வீரர் கைலியன் எம்பாப்பே உலகக் கோப்பை இறுதி போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை செய்துள்ளார்.