சினிமா செய்திகள்
11 கோடிக்கு புது வீடு வாங்கிய ஆலியா பட்!
பாலிவுட்டின் இளம் முன்னணி நடிகை பெயரை சொல்ல சொன்னால், இந்தியா முழுவதும் சட்டென்று சொல்லும் ஒரே பெயர் அது ஆலியா பட் தான்.
நடிக்க வந்து 6 வருடங்களில் மும்பையில் இரண்டு வீடுகளை வாங்கியுள்ளார் ஆலியா பாட். தற்போது ஜூஹூ கடற்கரையில் புதிதாக 11 கோடிக்கு 2,300 சதுர அடி அபார்ட்மெண்ட் ஒன்றை வாங்கியுள்ளார்.
இந்த அபார்ட்மெண்டின் விலை வெறும் 7 கோடி ரூபாய் தானாம். ஆனால், ஆலியாவிற்காக சில மாறுதல்கள் செய்ததால், 11 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளனர்.
வீடு வாங்கியாச்சு, ரன்பீர் கபூருடன் திருமணம் எப்போது என்றும் ஆலியா விரைவில் சொல்வார் என்றே பாலிவுட் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.