சினிமா செய்திகள்
பேட்மிண்டனில் சாதனை படைத்த விஜய்யின் மகள்!
தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், குறும்படங்களை இயக்கி மீடியா மற்றும் ரசிகர்கள் பேசும் பொருளாக சில வாரங்களுக்கு முன்னர் மாறினார்.
தற்போது, மகனை தொடர்ந்து விஜய்யின் மகளின் பக்கமும் மீடியாக்கள் பார்வை திரும்பும் வண்ணம் அவரும் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.
சென்னையில் உள்ள அமெரிக்கன் இண்டர்நேஷனல் பள்ளியில் பயின்று வரும் விஜய்யின் மகள் சாஷா, படிப்பை விட பேட்மிண்டனில் சிறந்து விளங்குகிறார்.
தற்போது, அவர் இடம்பெற்றுள்ள ASIAC பேட்மிண்டன் அணி சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான பேட்மிண்டன் போட்டியில் மூன்றாவது இடம் பெற்றுள்ளது.
குழுவுடன் சாஷா விஜய் உள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. முன்னதாக அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் விஜய்யின் மகளாக சாஷா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.