Connect with us

சினிமா

2022-ம் ஆண்டு கூகுளில் தேடப்பட்ட டாப் 10 படங்களில் இடம்பெற்ற ஒரே ஒரு தமிழ்ப் படம்!

Published

on

கூகுள் தேடுபொறியில் ஒவ்வொரு ஆண்டும் அதிக தேடப்பட்ட படங்களின் பட்டியலை அந்த ஆண்டின் டிசம்பர் மாதம் வெளியிடும்.

அப்படி 2022-ம் ஆண்டு இந்தியாவில் அதிகமாகத் தேடப்பட்ட டாப் 10 படங்களின் பட்டியலை கூகுள் புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

அதில் ஒரே ஒரே தமிழ்ப்படம் மட்டும் இடம்பெற்றுள்ளது. 2022-ம் ஆண்டு கூகுளில் தேடப்பட்ட டாப் 10 படங்களின் பட்டியலை இங்கு பார்க்கலாம்.

1) பிரமாஸ்திரம்

ஆதரவற்ற இளைஞன் ஒருவன் தீய சக்திகளிடம் காக்கும் அஸ்திரமாக என்ன ஆகும் என்பதுதான் பிரமாஸ்திரம் படத்தின் கதை. ரன்வீர் கபூர் நாயகனாக இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஷாருக்கான், நாகார்ஜுனா உள்ளிட்ட பலர் கவுரவ வேடத்தில் நடித்தனர். தொழில்நுட்ப ரீதியாக சிறந்த படம் என பெயர் பெற்ற பிரமாஸ்திரம் படத்தில் கதையே இல்லை என விமர்சிக்கப்பட்டது. பிரமாஸ்திரம் படம் கூகுளில் தேடப்பட்ட நம்பர் 1 படமாக உள்ளது.

2) கேஜிஎஃப் 2

kgf

2018-ம் ஆண்டு யாஷ் நடிப்பில் உருவான கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் கூகுளில் தேடப்பட்ட இரண்டாம் படமாக உள்ளது.

3) தி காஷ்மீட் ஃபைல்ஸ்

காஷ்மீரில் இந்து பண்டிட்கள் விரட்டி அடிக்கப்பட்டதைக் கதைக் கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தி காஷ்மீட் ஃபைல்ஸ் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், கூகுளின் தேடல் பட்டியலில் 3-ம் இடத்தை பிடித்துள்ளது.

4) ஆர்ஆர்ஆர்

ராஜமவுளி இயக்கத்தில் பாகுபலி, பாகுபலி 2 திரைப்படங்களுக்குப் பிறகு மிகப் பெரிய பொருட் செலவில் உருவான படம் ஆர்.ஆர்.ஆர். ராம் சரன், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கான உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் 2022-ம் ஆண்டு கூகுளில் தேடப்பட்ட படங்கள் பட்டியலில் 4-ம் இடத்தில் உள்ளது.

5) காந்தாரா

ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய காந்தாரா திரைப்படம் இந்த ஆண்டு குரை-த செலவில் உருவாக்கப்பட்டு மிகப் பெரிய வசூல் செய்த படமாக உருவாகியுள்ளது. 2022-ம் ஆண்டு கூகுளில் தேடப்பட்ட படங்கள் பட்டியலில் காந்தாரா 5-ம் இடத்தில் உள்ளது.

6) புஷ்பா

pushpa

அல்லு அர்ஜூன் நடிப்பில் செம்மர கடத்தலைக் கதையின் பின் கருவாகக் கொண்டு உருவான படம் கூகுளில் தேடப்பட்ட படங்கள் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.

7) விக்ரம்

நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் 2022-ம் ஆண்டு கூகுளில் தேடப்பட்ட படங்கள் பட்டியலில் 7வது இடத்தை பிடித்துள்ளது. டாப் 10 படங்கள் பட்டியலில் இடம்பெற்ற ஒரே தமிழ் படம் இதுமட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

8) லால் சிங் சந்தா

அமீர்கான் நடிப்பில் ரிலீஸ்ச் ஆகி மிகப் பரிய நட்டத்தை ஏற்படுத்திய லால் சிங் சந்தா படம் 2002-ம் ஆண்டு கூகுளில் தேடப்பட்ட டாப் 10 படங்கள் பட்டியலில் 8வது இடத்தை பிடித்துள்ளது.

9) த்ரிஷ்யம் 2

க்ரைம் திரில்லார் படமான த்ரிஷ்யம் 2, இந்த ஆண்டு கூகுளில் தேடப்பட்ட டாப் 10 படங்கள் பட்டியலில் 9வது இடத்தை பிடித்துள்ளது. மலையாளத்தில் உருவான இந்0த திரைப்படம் தெலுங்கு, இந்தி மொழிகளில் ரிமேக் செய்யப்பட்டு இந்த அண்டு ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.

10) தோர்: லவ் & தண்டர்

2022-ம் ஆண்டு இந்தியாவில் அதிகளவில் தேடப்பட்ட டாப் 10 படங்களில் இடம்பெற்ற ஒரே ஹாலிவுட் படம் தோர்: லவ் & தண்டர் 10-ம் இடத்தில் உள்ளது.

author avatar
seithichurul
சினிமா4 மணி நேரங்கள் ago

கோல்ட் கேஸ்: ஓடிடி திரையை உலுக்கிய மர்ம திரில்லர்!

ஜோதிடம்4 மணி நேரங்கள் ago

6 நாளில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், அதிர்ஷ்டம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
மாத பலன்4 மணி நேரங்கள் ago

ஆவணி மாத ராசி பலன் 2024!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்17 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்1 நாள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்1 நாள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு1 நாள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா1 நாள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்1 நாள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்6 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

சினிமா3 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்4 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!