சினிமா செய்திகள்
நீண்டநாள் காதலருடன் ஹன்சிகா திருமணம்.. வைரலாகும் புகைப்படம்!
நடிகை ஹன்சிகா நீண்ட நாளாக காதலித்து வந்த காதலரை நேற்று திருமணம் செய்த நிலையில் இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.
ஜெயம் ரவி நடித்த ‘எங்கேயும் காதல்’ என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா, அதன்பின்னர் விஜய், சூர்யா உள்பட பல தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பதும் இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட்டாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை ஹன்சிகா தனது பிசினஸ் பார்ட்னரும், நண்பருமான சோஹைல் கதுரியா என்பவரை நேற்று திருமணம் செய்துகொண்டார். ராஜஸ்தானில் உள்ள பிரம்மாண்டமான அரண்மனையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் திரையுலகினர் நண்பர்கள் உற்றார் உறவினர் உட்பட பலர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது பிசினஸ் பார்ட்னராக சோஹைல் கதுரியாவை இணைத்துக்கொண்ட ஹன்சிகா அதன் பிறகு அவர் மீது காதலில் விழுந்து தற்போது அவரை கணவராக ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஹன்சிகா – சோஹைல் கதுரியா திருமண புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்கள் இந்த தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.