சினிமா செய்திகள்
அசுரனாக மாறிய ‘வெக்கை நாவல்’!
![Asuran - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/01/Asuran.jpeg)
சாகித்ய அகாடமி விருது பெற்ற பூமணி எழுதிய ’வெக்கை’ நாவலைத்தான் அசுரன் என்ற பெயரில் இயக்குநர் வெற்றிமாறன் படமாக்கி வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
வடசென்னை படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள லேடி சூப்பர்ஸ்டார் மஞ்சு வாரியர் நடிக்கவிருக்கிறார்.
1982ம் ஆண்டு வெளியான வெக்கை நாவலின் கதை என்னவென்றால், 15வயது சிறுவன் ஒருவன் கொலை செய்கிறான். பின்னர் தனது அப்பாவுடன் தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறான். நீதிமன்றத்தில் சரணடைவதற்கு முன்பு அவனது வாழ்க்கையில் நடக்கும் அத்தனை த்ரில் சம்பவங்களும் தான் வெக்கை நாவலின் கதையாக உள்ளது.
இந்த படத்தில் முக்கியமான அப்பா ரோலில் தனுஷே நடிக்கவுள்ளாரா அல்லது வேறு யார் நடிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. நிச்சயம் இந்த படம் பல விருதுகளை அள்ளி குவிக்கும் என்றும் கணிக்கப்பட்டு வருகின்றது.