வணிகம்
இந்தியாவில் அதிக தொழிற்சாலை உள்ள மாநிலம் தமிழ்நாடு.. எவ்வளவு தெரியுமா?
இந்தியாவில் அதிக தொழிற்சாலை உள்ள மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு பெற்றுள்ளது.
ஆர்பிஐ என அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கி, மாநிலம் வாரியாக எவ்வளவு தொழிற்சாலை உள்ளன என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.
அந்த பட்டியலில் தமிழ்நாட்டில் மட்டும் 38,837 தொழிற்சாலைகள் என, இந்தியாவின 15.7 சதவிகித தொழிற்சாலைகள் உள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ள குஜராத்தில் 11.5 சதவிகித தொழிற்சாலைகள் உள்ளன.
இந்த பட்டியலில் 3வது இடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் 10.3 சதவிகித தொழிற்சாலைகள் உள்ளன.
தமிழ்நாடு அரசு தொழில் நிறுவனங்களுடன் இப்போது சமீப ஆண்டுகளாக போட்டுள்ள ஒப்பந்தங்களின் படி வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் ஆர்பிஐ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.