சினிமா செய்திகள்
ஹேப்பி பெர்த் டே ஸ்ருதி!
நடிகர் கமல்ஹாசனின் மகளும், பாடகியும் நடிகையுமான ஸ்ருதி ஹாசனின் 33வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
2009ம் ஆண்டு வெளியான உன்னைப்போல் ஒருவன் படத்தில் தந்தைக்கு இன்ட்ரோ பாடல் பாடி தமிழ் சினிமாவில் அறிமுகமான ஸ்ருதி ஹாசன், சூர்யாவின் ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார்.
பாலிவுட், டோலிவுட் என பல படங்களில் பிசியாக வலம் வந்த ஸ்ருதி ஹாசன், தனுஷுடன் 3, விஜய்யுடன் புலி, விஷாலுடன் பூஜை, சூர்யாவுடன் சிங்கம் 3, போன்ற படங்களில் நடித்தார்.
ஆனால், அவர் நடிப்பில் வெளியான பல படங்கள் தோல்வியை தழுவியதால், அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இன்றி, தற்போது இசையை மட்டுமே பிரதானமாக கொண்டும் சன் டிவியில் ஹலோ சகோ நிகழ்ச்சியை நடத்திக் கொண்டும் இருக்கிறார்.