சினிமா செய்திகள்
ஜிப்ஸி படத்திற்காக ஜீவா யாரிடம் மிதி வாங்கினார் தெரியுமா?
குக்கூ, ஜோக்கர் படங்களை தொடர்ந்து இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா, நடாஷா சிங் நடித்துள்ள படம் தான் ஜிப்ஸி.
ஜிப்ஸி என்றால் கார் அல்ல நாடோடிகள் என்று அர்த்தம். இந்த படத்தில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நாடோடிகளின் வாழ்க்கையும், அவர்களை பின் தொடரும் அரசியல் குறித்தும் ராஜூமுருகன் தனக்கே உரிய பாணியில் படமாக்கி உள்ளார்.
முன்னதாக வெளியான சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான வெரி வெரி பேட் பாடல் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகின்றது.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் பதிலளித்த நடிகர் ஜீவா, கற்றது தமிழ், ஈ, போன்ற கதைகளில் ஏன் இப்போது நடிப்பதில்லை என கேட்டவர்களுக்கான படமாக இது இருக்கும் என்றார். மேலும், இந்த படத்தில் அவருடன் டிராவல் செய்யும் வெள்ளைக் குதிரைக்கு கடலைமிட்டாய் வாங்கி தந்து நட்பாக்கிக் கொண்டதாகவும் பல முறை தன் கால்களை குதிரை மிதித்துள்ளதாகவும், அதன் வலியை அதனிடம் மிதி வாங்கினால் தான் உணர முடியும் என்றும் தெரிவித்தார்.